Tuesday, February 4, 2014

புதிய கண்டுபிடிப்புக்கள்

13. விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு

       அமெரிக்காவின் மேற்கு விர்ஜினீயா பல்கலை கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி டி.ஜெ.பி. பிகானோ தலைமையிலான குழுவினர் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டு பிடித்தனர்.

      
     அது மிகவும் மங்கலாக, மெலிதாக பரவி ஓடுகிறது. இது விண்வெளியின் பால் மண்டலத்தில் என்.ஜி.சி. 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி பாய்கிறது. இந்த ஹைட்ரஜன் ஆறு பூமியில் இருந்து 2 கோடியே 20 இலட்சம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

    இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 



14.பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது

             

சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.
 
பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
 
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.
 
இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் கடந்து விட்டது.
 
கடந்த 2012ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டொலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருமானம் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
 
பேஸ்புக்கின் ஸ்தாபகர் மார்க் ஸூகர்பேர்க் கடந்த மே மாதம் தனது 30அவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                       

                                      

 

No comments:

Post a Comment