Tuesday, February 4, 2014

புதிய கண்டுபிடிப்புக்கள்

13. விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு

       அமெரிக்காவின் மேற்கு விர்ஜினீயா பல்கலை கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி டி.ஜெ.பி. பிகானோ தலைமையிலான குழுவினர் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டு பிடித்தனர்.

      
     அது மிகவும் மங்கலாக, மெலிதாக பரவி ஓடுகிறது. இது விண்வெளியின் பால் மண்டலத்தில் என்.ஜி.சி. 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி பாய்கிறது. இந்த ஹைட்ரஜன் ஆறு பூமியில் இருந்து 2 கோடியே 20 இலட்சம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

    இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 



14.பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது

             

சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.
 
பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
 
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.
 
இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் கடந்து விட்டது.
 
கடந்த 2012ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டொலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருமானம் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
 
பேஸ்புக்கின் ஸ்தாபகர் மார்க் ஸூகர்பேர்க் கடந்த மே மாதம் தனது 30அவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                       

                                      

 

Monday, January 27, 2014

2014 ஆம் ஆண்டின் புதிய கண்டுபிடிப்புக்கள்...................

  ஜனவரி  மாதத்தில்  கண்டுபிடிக்கப்பட்டவை

1. விரைவில்..! உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை       காட்சிப்படுத்தும் தொலைபேசி 

மறு­பக்­கத்தில் உரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ள­வரின் முப்­ப­ரி­மாணத் தோற்­றத்தை காட்­சிப்­ப­டுத்தி, அவ­ருடன் நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டு­வது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலை­பே­சியை எதிர்­வரும் வருட இறு­திக்குள் அறி­மு­கப்­ப­டுத்த போலந்து கம்­ப­னி­யொன்று நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளது. 

 1977ஆம் ஆண்டு வெளி­யாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்­ப­டத்தின் கதாநாய­கியை குறிக்கும் வகையில் மேற்­படி கம்­ப­னிக்கு யெலிஸா டிஸ்­பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த நிறு­வ­ன­மா­னது முப்­ப­ரி­மாண விம்ப உப­கரணங்­களை வெற்­றி­க­ர­மாக ஸ்தாபித்­த­தை­ய­டுத்து, அந்த தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கிய மாதிரி தொலைபேசியை எதிர்­வரும் வரு­டத்­துக்குள் அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது.
 
இந்தக் தொலை­பேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.

 

2. இணையத்தளத்துடன் தொடர்பை கொண்ட பற்தூரிகை 

இணை­யத்­த­ளத்­துடன் தொடர்பைக் கொண்ட உலகின் முத­லா­வது பற்­தூ­ரிகை அமெ­ரிக்க நெவாடா மாநி­லத்தின் லாஸ் வெகாஸ் நகரில் சர்­வ­தேச இலத்­தி­ர­னியல் கண்­காட்­சி­யை­யொட்டி ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்வில் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டது.

இந்த கொலி­பிறி பற்­தூ­ரி­கை­யி­லுள்ள உணர் கலங்கள் பற்­களை துலக்கும் போது பற்­க­ளி­லுள்ள கனி­யுப்புப் படி­மங்கள் எந்­த­ள­வுக்கு அகற்­றப்­ப­டு­கின்­றன என்­பதை கணிப்­பி­டு­கின்­றன.
 
இந்த பற்­தூ­ரி­கை­யா­னது கம்­பி­யில்லா தொழில்நுட்பம் மூலம் கணினிக்கு தகவல் களை அனுப்புகிறது.

                                                             



3.பூமியின் சகோதரர்!: புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு

                                        

         

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஹார்வர்டு - ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த, டேவிட் கிபிங் கூறியதாவது: மற்றொரு சூரிய மண்டலத்தில், 200 ஒளி ஆண்டு, தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இந்த புதிய கிரகம், பூமியை விட, 60 மடங்கு பெரிதானது.

இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கே.ஓ.ஐ.-314' என, பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை, 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

                                       


4. முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்திரனில்   வீடுகள் நிர்மாணிக்க நாசா திட்டம்



                 அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவானது முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்திரனில் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது குறித்து அறிவிப்புச் செய்துள்ளது.





சந்திரனில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான கட்டமைப்பை நிர்மாணிப்பதே நாசாவின் முக்கிய இலக்காக உள்ளது.
 
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களை கணிணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24 மணி நேரத்தில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்நிலையில் மேற்படி முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதற்கு அமெரிக்கா தென் கலிபோனியா பல்கலைக்கழகத்திற்கு நாசா தற்போது நிதியுதவி அளித்துள்ளது.
 
அமைப்புக் கைவினைத்திறன் என அழைக்கப்படும் இந்த செயற்கிரமம் சந்திரனின் மேற்பரப்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பில் கொங்கிறீட் அல்லது ஏனைய மூலப் பொருட்களை பயன்படுத்தி வீடுகளை அமைப்பதே நோக்காகக் கொண்டது.
 
 
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சில பாகங்கள் பூமியில் உருவாக்கப்பட்டு ஏவுகணையொன்றின் மூலம் சந்திரனுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எனினும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான 90 சதவீத மூலப்பொருட்கள் ஏற்கனவே சந்திரனில் உள்ளதாக கூறப்படுகின்றது.
 
மேற்படி புதிய வீடமைப்பு முறைமையைப் பயன்படுத்தி அனர்த்த வலயங்களிலும் சேரிப்பகுதிகளிலும் இலகுவாக வீடுகளை நிர்மாணிக்க முடியும் என தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ் தெரிவித்தார்.
 

 


 

5.செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதிய விண்கலம்

 செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது.

 சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வேலைகளைத் தொடங்கியுள்ளது நாசா. மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் அதிக எடை தாங்கும் வகையில் இந்தப் புதிய விண்கலம் தயார் செய்யப் பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்கலம் 384 அடி நீளம் கொண்டதாகவும்,  6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இதன் முதல் சோதனை ஓட்டத்தில்,  இது விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை தாங்கிச்செல்லும் என நம்பப்படுகிறது.
 
 புதிய விண்கலம் மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.
 
 தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 
 



 

6.செவ்வாய்கிரகத்தில் பூத்து குழுங்கும் தாவரங்கள்

செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என  விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

டச்சு பல்கலைக்கழகத்தை சேர்ந்த  சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங்  இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

 

 

அவர் கூறி இருப்பதாவது,

செவ்வாய்  மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின்  செயற்கை மண்ணில்   14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது .
 
.இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.

 

இது பொல்ல் அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.

 


7.ஆழ்கடலில் சுவாசிப்பதற்கு உதவும் உபகரணம்

 

மீன்­களைப் போன்று நீரி­லி­ருந்து ஒட்­சிசன் வாயுவை பெற்று சுவா­சிக்க உதவும் முக­மூடி உப­க­ர­ண­மொன்றை தென் கொரிய வடி­வ­மைப்­பாளர் ஒருவர் உரு­வாக்கி சாதனை படைத்­துள்ளார்.

மீன்­களின் சுவாசக் கட்­ட­மைப்பு போன்று செயற்­படும் இந்த 'திரைட்டன்' என அழைக்­கப்­படும் உப­க­ரணம், ஆழ்­க­டலில் ஒட்­சிசன் கொள்­க­லனின் உத­வி­யின்றி நீரி­லி­ருந்தே ஒட்­சி­சனைப் பெற்று சுவா­சிக்க வழிவகை செய்­கி­றது.

ஜிய­பையுன் யியோன் என்­ப­வரால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்த உப­க­ர­ணத்­தி­லுள்ள நுண் காற்­ற­ழுத்தக் கருவிகள் கடல் நீரி­லி­ருந்து ஒட்­சி­சனை வேறுபிரித்து அகத்­து­றிஞ்சி பயன்­பாட்­டா­ள­ருக்கு வழங்­கு­கி­ன்றன.



அத்­துடன், இந்த கருவிகள் தேவைக்கு மேல­தி­க­மாக தம்மால் அகத்­து­றிஞ்­சப்­படும் ஒட்­சி­சனை அந்த உப­க­ர­ணத்­துடன் இணைக்­கப்­பட்ட சிறிய தாங்­கியில் சேமிக்­கின்­றன.


மேற்­படி உப­க­ரணம் வழ­மை­யான மின்­னேற்ற பற்­ற­ரி­க­ளிலும் பார்க்க 30 மடங்கு சிறிய நுண் பற்­ற­ரியால் சக்­தி­யூட்­டப்­பட்டு செயற்­ப­டு­கின்­றது.
எனினும், இந்த கண்­டுப்­பி­டிப்பு முழுமை பெற்று பாவ­னைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு சிறிது காலம் தாம­த­மா­கலாம் என தெரி­விக்­கப்­ப­டுகிறது.


8.வாத்துக்குஞ்சுக்கு செயற்கை கால் பொருத்திய முப்­ப­ரி­மாண தொழில்­நுட்பம்

கன­டாவின் பிரிட்­டிஷ் கொலம்­பி­யா­வி­லுள்ள காலொன்றை இழந்த 5 மாத வய­தான வாத்துக் குஞ்கு ஒன்­றிற்கு முப்­ப­ரி­மாண அச்­சிடும் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி நக­ரக்­கூ­டிய பிளாஸ்­ரிக்­ கால் வெற்­றி­க­ர­மாக பொருத்­தப்­பட்­டுள்­ளது.


தற்­போது மேற்­படி வாத்து இயல்­பாக நட­மா­டவும் தன்னை விட 10 மடங்கு பெரிய பற­வை­களின் பாரத்தை தாங்­கி­ய­வாறு நிற்­கவும் கூடிய வல்­ல­மையைப் பெற்­றுள்­ளது.




9.மணிக்கு 19 மைல் வேகத்தில் பயணிக்கும் இராட்சத ரோபோவை உருவாக்கும் கனேடிய பொறியியலாளர்கள்

 

ஹொலிவூட் திரைப்­ப­ட­மான அவ­தாரில் வரு­வ­தை­யொத்த அச்­ச­மூட்டும் இராட்­சத உயர் தொழில்­நுட்ப ரோபோ இயந்­தி­ர­மொன்றை உரு­வாக்கும் முயற்­சியில் கன­டாவைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளனர்.
 

புரொஸ்­தீஸிஸ் என்­ற­ழைக்­கப்­படும் இந்த ரோபோ மனி­தனால் மனி­த­னுக்­காக உரு­வாக்­கப்­படும் உன்­னத படைப்­பென அதனை உரு­வாக்கி வரும் கன­டாவின் வான்­கூ­வரைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். 
 
 கடின வெளிப்­புற கட்­ட­மைப்பைக் கொண்ட 16 அடி உய­ர­மான இந்த ரோபோவை அதி­லுள்ள அறைக் கட்­ட­மைப்பில் அமர்ந்­துள்ள மனிதர் ஒருவர், தனது உடல் அசைவால் கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

 7,500 இறாத்தல் நிறை­யு­டைய இந்த ரோபோ மணிக்கு 19 மைல் வேகத்தில் பய­ணிக்­கக்­கூ­டி­யது.

பொறி­யியலா­ளர்கள் ஏற்­க­னவே மேற்­படி ரோபோ இயந்திரத்தின் செயற்றிறன் மிக்க கால் பகுதியை வெற்றிகரமாக உருவாக் கியுள்ளனர்.

 

 


10 . ஒருவர் மற்றவர் கண்களிடனூடாக உலகைக் காண்பதற்கு உதவும் உபகரணம்.

 

ஒருவர் மற்றவர் கண்களிடனூடாக உலகைக் காண்பதற்கு உதவும் புதிய தொழில்நுட்ப உபகரணமொன்­று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலுள்ள பிஎனதர் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த நிபுணர்களால் இந்த உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நீ காணும் யாவும் நான் காண வேண்டும் என விரும்பும் காதல் ஜோடிகளுக்கு ஒருவர் காண்பதை மற்றவர் காணும் அனுபவத்தை வழங்கும் முகமாக தலையில் அணியக்கூடிய இந்த ஒகுலஸ் றிப்ட் தலைக்கவச உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஒரு ஜோடி உபகரணங்களில் முதலாவது உபகரணத்திற்குள் அமைக்கப்பட்ட புகைப்படக்கருவி மற்றைய இரண்டாவது உபகரணத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள அதேசமயம், இரண்டாவது உபகரணத்திலுள்ள புகைப்படக்கருவி முதலாவது உபகரணத்துடன் இணைப்பைக் கொண்டுள்ளது. 
  இதன் மூலம் ஒருவர் காண்பதை மற்றவர் காண்பது சாத்தியமாகிறது.

 

 

11.கையடக்கத் தொலைபேசிகளுக்கு இருதய துடிப்பின் மூலம் சக்தி

 

பாவ­னை­யா­ள­ரது இரு­தய துடிப்பால் சக்தியூட்­டப்­பட்டு செயற்­ப­டக்­கூ­டிய பொருத்தக் கூடிய பற்­ற­ரி­யொன்றை விஞ்­ஞா­னிகள் அறி­மு­கப்­ப­டுத்தியுள்­ளனர்.

மேற்­படி பற்­ற­ரி­யா­னது எதிர்­கால கைய­டக்கத்தொலை­பே­சி­க­ளுக்கு சக்­தி­யூட்­டு­வ­தற்கு மின்­னேற்றி உப­க­ர­ணங்­களை (சார்ஜர்)எடுத்துச் செல்ல வேண்­டிய அவ­சி­யத்தை நீக்­கு­வதாக அமை­கி­ற­து.


அமெ­ரிக்க மற்றும் சீன விஞ்­ஞா­னி­களால் அறி­மு­கப்­ப­டுத்தப்பட்­டுள்ள இந்த பற்­றரி இரு­தயம், நுரை­யீரல் மற்றும் பிரி­மென்­ற­கடு போன்ற உறுப்­பு­களின் தொடர்ச்­சி­யான அசைவை மின் சக்­தி­யாக மாற்­று­கி­றது.

ஏற்­க­னவே இத்­த­கைய பற்­றரி இதய இயக்க உப­க­ர­ண­மொன்­றுக்கு சக்­தி­யூட்ட பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.



 

 
இந்த சிறிய நெகிழ்ச்­சித்­தன்­மை­யுள்ள பற்­ற­ரியை பசுக்­களில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய போது, அது இருதய இயக்க உப­க­ர­ண­மொன்றை செயற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அளவு சக்­தியைக் கொண்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இந் நிலையில் மேற்­படி பற்றரியை எதிர்காலத்தில் பலதரப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கும் சக்தியூட்ட பயன் படுத்துவ­தற்­கு விஞ்ஞானிகள் திட்ட மிட்டுள்ளனர்.


 

12. முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்

 தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்­ப­ட­மொன்றை ஒரு செக்­கனில் பதி­வி­றக்கம் செய்­யக்­கூ­டிய 5 ஆம் தலை­முறை கைய­டக்கத் தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறி­மு­கப்­ப­டுத்த  தயா­ரா­கி­யுள்­ளது.
 
இதன் பிர­காரம் மேற்­படி '5 ஜி' என்ற ஐந்தாம் தலை­முறை கைய­டக்கத் தொலை­பேசி சேவை­களில் 900 மில்­லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முத­லீடு செய்­துள்­ளது.
 
இந்த சேவையை பரீட்­சார்த்­த­மாக 2017 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தவும் அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்­ப­ருக்குள் வர்த்­தக ரீதி­யாக செயற்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
 
மேற்­படி தொழில்­நுட்­ப­மா­னது ஒரு செக்­கனில் 800 மெகா பைட் அள­வான திரைப்­பட கோப்பை பதி­வி­றக்கம் செய்­வ­தற்கு பயன்­பாட்­டா­ள­ருக்கு அனுமதிக்கிறது.
 
இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.
 
 
 ொடரும்.................